search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்கா டைனமைட்ஸ்"

    வங்காளதேச பிரிமீயர் லீக் இறுதிப் போட்டியில் டாக்கா டைனமைட்ஸ் - கொமிலா விக்டோரியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #BPL
    வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. இதில் 7 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதின. லீக் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடித்த ரங்க்பூர் ரைடர்ஸ், கொமிலா விக்டோரியன்ஸ், சிட்டகாங் வைக்கிங்ஸ், டாக்கா டைனமைட்ஸ் அணிகள் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறின.

    முதல் குவாலிபையரில் கொமிலா விக்டோரியன்ஸ் ரங்க்பூர் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டர் சுற்றில் சிட்டகாங் வைக்கிங்ஸ் அணியை வீழ்த்தி டாக்கா டைனமைட்ஸ் 2-வது குவாலிபையருக்கு முன்னேறியது.

    நேற்று 2-வது குவாலிபையர் நடைபெற்றது. இதில் ரங்க்பூர் ரைடர்ஸ் - டாக்கா ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ரங்க்பூர் ரைடர்ஸ் 142 ரன்கள் சேர்த்தது. பின்னர் 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டாக்கா டைனமைட்ஸ் களம் இறங்கியது. அந்த்ரே ரஸல் 19 பந்தில் 5 சிக்சர்களுடன் 40 ரன்கள் விளாச டாக்கா டைனமைட்ஸ் 16.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் கொமிலா விக்டோரியன்ஸ் - டாக்கா டைனமைட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொமிலா விக்டோரியன்ஸ் லெவிஸ், இம்ருல் கெய்ஸ், தமிம் இக்பால் போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். டாக்கா டைனமைட்ஸ் அணியில் ஷாகிப் அல் ஹசன், அந்த்ரே ரஸல், சுனில் நரைன் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.
    வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டாக்கா டைனமைட்சை 11 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிட்டகாங் வைக்கிங்ஸ். #BPL
    வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 தொடரில் 37-வது ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிட்டகாங் வைக்கிங்ஸ் - டாக்கா டைனமட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற சிட்டகாங் வைக்கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் டெல்போர்ட் 57 பந்தில் 71 ரன்களும், கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 24 பந்தில் 43 ரன்களும் விளாச, அந்த அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது.

    பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டாக்கா டைனமைட்ஸ் களம் இறங்கியது. கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 53 ரன்களும், விக்கெட் கீப்பர் நுருல் ஹசன் 33 ரன்களும், அந்த்ரே ரஸல் 39 ரன்களும் குவித்தனர். என்றாலும் மற்ற வீரர்கள் சோபிக்காததால் டாக்கா அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

    இதனால் சிட்டகாங் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சிட்டகாங் வைக்கிங்ஸ் 11 ஆட்டத்தில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. டாக்கா 10 போட்டியில் 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
    வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 தொடரில் ரங்க்பூர் ரைடர்ஸ் அணிக்கெதிராக டாக்கா டைனமைட்ஸ் இரண்டு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. #BPL
    வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டாக்கா டைனமைட்ஸ் - ரங்க்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ரங்க்பூர் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி டாக்கா டைனமைட்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.

    பொல்லார்டு 26 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 62 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 36 ரன்களும், ரசல் 23 ரன்களும் அடிக்க 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

    பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரங்க்பூர் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் (8), மெஹெதி மருஃப் (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், 3-வது விக்கெட்டுக்கு இணைந்த ரோஸவ், முகமது மிதுன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ரோஸவ் 83 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ரங்க்பூர் ரைடர்ஸ் அணி 15.3 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருந்தது. 27 பந்தில் 38 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட் இருந்தன. 17 ஓவர் முடிவில் ரங்க்பூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி 3 ஓவரில் 26 ரன்கள்தான் தேவைப்பட்டது.

    18-வது ஓவரை அல் இஸ்லாம் வீசினார். இந்த ஓவரின் கடைசி மூன்று பந்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். முகமது மிதுன் 49 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த மோர்தசா முதல் பந்திலேயே ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த பர்கத் ரேசாவையும் டக்அவுட்டில் வீழ்த்தினார். இதனால் ரங்க்பூர் அணி மளமளவென விக்கெட்டை இழந்தது.

    கடைசி இரண்டு ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் மூன்று விக்கெட்டுக்கள் இருந்தன. சுனில் நரைன் வீசிய 19-வது ஓவரில் 9 ரன்கள் எடுத்த ரங்க்பூர் 2 விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் கைவசம் ஒரு விக்கெட் இருக்க கடைசி ஓவரில் ரங்ப்பூர் அணிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.

    கடைசி ஓவரை அல் இஸ்லாம் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் ஷபியுல் இஸ்லாம் பவுண்டரிக்கு விளாசினார். இதனால் நான்கு பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த பந்தில் ஒரு கொடுத்த இஸ்லாம், 4-வது பந்தில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்கவில்லை.

    அடுத்த இரண்டு பந்திலும் ரங்க்பூர் அணி தலா ஒரு ரன் மட்டுமே அடித்ததால் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டாக்கா டைனமைட்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
    ×